ஈரோடு, ஆக.29: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பெருந்துறை நகர பாஜவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அருணா சிவபிரகாஷ் தலைமையில் நகர துணை தலைவர் பாண்டியன், கலை மற்றும் கலாசார அணி நகர துணை தலைவர் பழனிச்சாமி, குமார், தாமோதரன், அகில இந்திய நாடார் மக்கள் பேரவை மாநில அமைப்பு செயலாளர் மகாராஜா, அதிமுக ரகுபதி, கண்ணன், கம்யூனிஸ்ட் கட்சி ரமேஷ்,
அல்லாபாஜி உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த 50 பேர் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு வெங்கடாச்சலம் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பெருந்துறை நகர செயலாளர் ஓசிவி ராஜேந்திரன், துணை செயலாளர் சத்தியகுமார், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூர் செயலாளர் அகரம் திருமூர்த்தி, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சோளி பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.