அந்தியூர், செப்.27: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள முனியப்பம் பாளையத்தில் நகலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமினை எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மக்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்றி தரும்படி வேண்டுகோள் விடுத்தார்.
இந்த குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவைகள் கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர். இதில் நகலூர், முனியப்பம்பாளையம், கொண்டையம்பாளையம், பெருமாபாளையம், கொம்பு தூக்கி அம்மன் கோவில், குண்டு மூப்பனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்தி கிருஷ்ணன், மின்வாரிய கோட்ட பொறியாளர் அங்கப்பன், கூட்டுறவு துறை செயலாளர் பிரபு உள்பட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.