ஈரோடு,செப்.26: கவுந்தப்பாடி அருகே சரக்கு வாகனத்தில் 1.7 டன் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பெரியபுலியூர் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜகுமார்,எஸ்ஐ மேனகா தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த வாகனத்தில் 1,700 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேனை டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் பவானி பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி (56) என்பது தெரிய வந்தது.
பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, ஈரோடு பகுதிகளில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வதை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தீர்த்தகிரியை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 1,700 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர்.