ஈரோடு, ஆக. 22: சிவகிரி அடுத்த கருக்கம்பாளையத்தில் உள்ள புதர் மறைவில் சிலர் சீட்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக, சிவகிரி போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அப்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு, சீட்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். அக்கும்பலை விரட்டிப் பிடித்த போலீசார், விசாரணை செய்தனர்.
நல்ல செல்லிபாளையத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (52), அதேப்பகுதியைச் சேர்ந்த சண்முகம் (63), ஈரோடு வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த நடராஜ் (42), தொப்பம்பாளையத்தைச் சேர்ந்த பாலு (62) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், 3 இருசக்கர வாகனங்கள், சீட்டுக்கட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.