ஈரோடு, நவ.19: ஈரோடு சாப்ட்வேர் இன்ஜினியர், சேலம் லாட்ஜ் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் சில்வர் ஓக் அப்பார்ட்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (51). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், பிரபலமான ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை சேர்ந்தவராவார். தற்போது பெங்களூரிலேயே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாஸ்கர் அவரது மனைவியிடம் நண்பர்களுடன் ஏற்காடு சென்று வருகிறேன் என கூறியுள்ளார். வீட்டிலிருந்து காரில் புறப்பட்டுள்ளார். சேலத்தில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். அன்று இரவு 9 மணியளவில் அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டும், போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், லாட்ஜ் நம்பருக்கு தொடர்பு கொண்டுள்ளார். லாட்ஜ் ஊழியர்கள் அறைக்கு வந்து பார்த்தனர்.
அங்கு கழிவறையில் அவர் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் தூக்கில் தொங்குவதற்காக டவுன் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று வெள்ளை நிற காடா துணி வாங்கி வந்து தூக்கிட்டுக்கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


