ஈரோடு, செப். 19: சிவகிரி அடுத்த அஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (31). கோழிக்கடையில் வேலைபார்த்து வந்த அவருக்கு, கடந்த 16ம் தேதி கடும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும், வலி சரியாகவில்லை என தெரிகிறது. இதனால் வீட்டில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் மீனாட்சி அளித்த புகாரின்பேரில் சிவகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு என்.ஜி.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி விக்னேஷ் (30). மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர், தினமும் மது அருந்திவிட்டு, தனது மனைவி கீதாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 16ம் தேதி மதுப்போதையில் வந்த விக்னேஷ், தனது மனைவி கீதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த விக்னேஷ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து ஈரோடு ஜி.ஹெச் போலீசார் விசாரித்து வருகின்றனர்.