பவானி, நவ. 18: பவானி நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இணை இயக்குனர் (திட்டம்) உமா மகேஸ்வரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பவானி நகராட்சியில் அம்ரூத் குடிநீர் விரிவாக்கத் திட்டம், கசடு நீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டதோடு, விரைவில் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். மேலும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் செயல்பட்டு வரும் உரக்கிடங்கு செயல்பாடுகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பவானி நகராட்சி தினசரி மார்க்கெட்டையும் பார்வையிட்டார். உடன், நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், பொறியாளர் திலீபன், பணி மேற்பார்வையாளர் சாகுல் ஹமீது, வருவாய் ஆய்வாளர் வின்சென்ட் ராஜ், சுகாதார ஆய்வாளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


