ஈரோடு, அக். 17: புளியம்பட்டியில் தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் ரோகித் என்ற கண்ணாடி ரோகித் (22). இவர், மீது திருட்டு, கொள்ளை, அடிதடி உட்பட 15 குற்ற வழக்குகள் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன் ரோகித் மேலும் ஒரு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வரும் ரோகித்தை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி சுஜாதா, கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதனை ஏற்ற ஈரோடு கலெக்டர் கந்தசாமி, ரோகித்தை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், கோபி சிறையில் இருந்த ரோகித்தை குண்டர் சட்டத்தில் நேற்று புளியம்பட்டி போலீசார் கைது செய்து, அவரை பாதுகாப்பாக அழைத்து சென்று, கோவை உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.