ஈரோடு, செப். 17: சென்னிமலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செங்கோட்டையனுக்கு சிறந்த ஒன்றிய செயலாளர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
இவர், ஒன்றுபட்ட ஒன்றிய கழக பொறுப்பாளராகவும், 2006-ம்ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். 2019-ல் நடைபெற்ற கழக அமைப்பு தேர்தலில் ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டு தற்போது வரை பணியாற்றி வருகிறார். சிறந்த ஒன்றிய செயலாளராக விருது பெறும் செங்கோட்டையனுக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.