ஈரோடு, அக். 16: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு சலுகையாக பிரிபெய்டு சிம்மிற்கு ரூ.1க்கு ரீசார்ஜ் செய்தால் வரம்பில்லா அழைப்புகள் பெறலாம். இதுகுறித்து ஈரோடு மாவட்ட பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியதாவது: பிஎஸ்என்எல் சிறப்பு தீபாவளி பிரிபெய்டு மொபைல் ரீசார்ஜ் திட்டமாக, 1 ரூபாய் செலுத்தி வரம்பில்லா அழைப்புகள், தினமும், 2 ஜிபி, டேட்டா, 100 எஸ்எம்எஸ்.கள், என 30 நாட்கள் பயன்பெறலாம்.
இந்த சிறப்பு சலுகையை வருகிற நவம்பர் மாதம் 15ம் தேதி வரை மட்டுமே. புதிய பிஎஸ்என்எல் பிரிபெய்டு மொபைல் வாடிக்கையாளர்கள், மொபைல் நம்பர் போர்டபிளிட்டி மூலம் பிஎஸ்என்எல்க்கு மாறும் வாடிக்கையாளர்களும் இந்த சலுகையை பெறலாம். பிஎஸ்என்எல் இன் ‘4ஜி’ சேவையுடன் இணைந்து பண்டிகை கால பயனை பெறலாம். விரைவில், ‘5ஜி’க்கு பிஎஸ்என்எல் தயாராகி வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.