ஈரோடு, செப்.16: ஈரோடு கே.எம்.சி.எச். ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வரும் 30ம்தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு இருதய பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை,கொழுப்பு சத்தின் அளவு, ஹீமோகுளோபின், கிரியேட்டினில், ஈசிஜி, எக்கோ, டிஎம்டி மற்றும் மருத்துவ ஆலோசனை ஆகியவை வழங்கப்படுகிறது.மேலும், ரூ.3,100 மதிப்பிலான இருதய பரிசோதனை வெறும் ரூ.1,100க்கு அளிக்கப்படுகிறது. ஆஞ்சியோகிராம், இருதய அறுவை சிகிச்சை ஆகியவை சலுகை கட்டணத்தில் செய்துகொள்ளலாம் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.