ஈரோடு, செப்.15:ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் பாலத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட மீன் கடைகள் இயங்கி வருகிறது. மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, ராமேஸ்வரம், காரைக்கால், கேரளா போன்ற பகுதியில் இருந்து கடல் மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். நேற்று வார இறுதி நாள் என்பதால் காலை முதலே வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
இன்னும் 3 நாட்களில் புரட்டாசி மாதம் துவங்க இருப்பதால் நேற்று மார்க்கெட்டில் மீன்கள் அதிக அளவில் விற்பனையானது. இதனால் மீன்கள் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் நிலை கிலோவில் வருமாறு:-வஞ்சரம் 900, வெள்ளை வவ்வால் 750, கருப்பு வவ்வால் 500, பாறை 550, முரல் 200, முரல் 270, சங்கரா 400, இறால் பெரியது 500, இறால் சிறியது 300, அயிலா ரூ.250, நெத்திலி 300க்கு விற்பனையானது.