ஈரோடு, செப்.15: புளியம்பட்டி அடுத்த பொன்னம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்தியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட பொதுமக்களையும்,ஆபாச வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புளியம்பட்டி போலீசார், அந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அதில் கவிலிபாளையத்தைச் சேர்ந்த ஆரோக்கிய எட்வின் (26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.