ஈரோடு, செப்.15: ஈரோடு பழைய கரூர் ரோட்டில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர் அப்போது போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற 2 பேரை பிடித்தனர். விசாரணையில் சூரம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (25), பூபதி (33) ஆகியோர் என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த 3.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் கஞ்சா விற்ற, மண்டபம் வீதியைச் சேர்ந்த தியானேஷ் (20), மரப்பாலத்தைச் சேர்ந்த டேனியல் அஜய் (21), ஓடப்பள்ளத்தைச் சேர்ந்த பிரசாந்த் (19) ஆகியோரை கைது செய்த டவுன போலீசார் 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.