ஈரோடு, அக். 14: ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் முபாரக் அலி(48). சுமை தூக்கும் தொழிலாளரான அவர், கடந்த 7ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் கொடுமுடி சென்றுள்ளார். அப்போது, வேகத்தடையில் தடுமாறி கீழேவிழுந்த முபாரக்அலி படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், முபாரக்அலி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர் ஹர்சத்அலி கொடுத்த புகாரின் அடிப்படையில் மலையம்பாளையம் போலீசார் விசாரித்தனர்.
+
Advertisement