ஈரோடு, அக். 14: தாளவாடி அடுத்த திஜினாரை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னகுமார். இவரது மகள் சோபியா (23). இவர், தாளவாடியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், செவிலியராக பயிற்சி மாணவியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பணிக்கு செல்வதாக கூறிச்சென்ற சோபியா, இதுவரை வீடு திரும்பவில்லை. மருத்துவமனையில் விசாரித்தபோது, அவர் பணிக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை பிரசன்னகுமார் அளித்த புகாரின்பேரில், மாயமான சோபியாவை தாளவாடி போலீசார் தேடி வருகின்றனர்.
+
Advertisement