கோபி, அக். 14: கோபி அருகே உள்ள டி.ஜி.புதூரில் காதல் தோல்வியால் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோபி அருகே உள்ள டி.ஜி.புதூரை சேர்ந்தவர் ராஜா மகன் விக்னேஷ் (28). பிகாம்.சி.ஏ. படித்துள்ள விக்னேஷ், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்த விக்னேஷ், நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் காதல் தோல்வியால் விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.