ஈரோடு,ஆக.14: பெருந்துறை அடுத்த பொன்முடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. முகாமை கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டு, கோரிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டு வருவதையும், இதுவரை பெறப்பட்ட மொத்த மனுக்களின் எண்ணிக்கை குறித்தும் அலுவலர்களிடம் கலெக்டர் கந்தசாமி கேட்டறிந்தார்.
இதனையடுத்து, வில்லரசம்பட்டி நியாய விலைக்கடையில், பொது விநியோக பொருட்களின் இருப்பு, விற்பனை விபரம்,பயன்பெறும் மொத்த குடும்ப அட்டைதாரர்கள் எண்ணிக்கை,குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி,சர்க்கரை,துவரம் பருப்பு,பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் அளவு,தினசரி கடை செயல்படும் வேலை நேரம் மற்றும் விடுமுறை நாட்கள் விபரம் மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது, பெருந்துறை ஒன்றிய திமுக செயலாளர் கே.பி.சாமி, துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.