ஈரோடு, நவ.13: ஈரோடு திருநகர் காலனியைச் சேர்ந்தவர் முகமது குத்துசூல் யாசர் அராபத் (40). இவர் தனக்கு திருமணமாகாத விரக்தியில் 2005ம் ஆண்டு முதல் மனநிலை பாதிக்கப்பட்டார். இதனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும், மனநல பாதிப்புக்கான மாத்திரைகளை சாப்பிட்டும் வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை அவர் சாப்பிட்டுள்ளார். மயக்க நிலையில் இருந்த அவரை மீட்ட உறவினர்கள், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி முகமது குத்துசூல் யாசர் அராபத் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தம்பி முகம்தா பாஜீலா அளித்த புகாரின் பேரில், கருங்கல்பாளையம் போலீசார் விசாரித்தனர்.
