ஈரோடு, அக்.13: ஈரோடு மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர்.
அதில், வெள்ளோடு அடுத்த தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்த அருள்ஜோதி (42), ஈரோடு அடுத்த சூரியம்பாளையத்தை சேர்ந்த தனலட்சுமி (50), நம்பியூர் அடுத்த புளியம்பாளையம் பிரிவை சேர்ந்த ரங்கசாமி (66), பவானி வாரச்சந்தையை சேர்ந்த தனபால் (64), சூரம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (49), ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று, கர்நாடக மாநில மதுபாட்டில் வைத்திருந்த சத்தியமங்கலம் செண்பகபுதூரை சேர்ந்த ரங்கசாமி (42) என்பவரை, கோபி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.