ஈரோடு, செப். 13: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள மத்திய மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் பெருந்துறை ஒன்றிய பூத் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, முன்னாள் அமைச்சரும், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார். பெருந்துறை தொகுதி மேற்பார்வையாளர் கோவை மாலதி முன்னிலை வகித்தார்.
இதில், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்வது, திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறுவது, தேர்தல் பணிகளை அனைவரும் தீவிரமாக மேற்கொள்வது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், பெருநதுறை ஒன்றிய செயலாளர்கள் கே.பி.சாமி, பெரியசாமி, பால் சின்னுசாமி, கனகராஜ், பெருந்துறை நகர செயலாளரும், நகராட்சி தலைவருமான ஓசிவி ராஜேந்திரன், பேரூர் செயலாளர்கள் தங்கமுத்து,
செந்தில்முருகன், அகரம் திருமூர்த்தி, பேரூராட்சி தலைவர் செல்வன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாலகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியம், சார்பு அணி அமைப்பாளர்கள் சின்ராசு, சோளிபிரகாஷ், ஹேமலதா, மாவட்ட செய்தி தொடர்பாளர் இளம்பரிதி, பூத் ஒருங்கிணைப்பாளர்கள், பாக முகவர்கள் மற்றும் திமுக.வினர் பலர் கலந்து கொண்டனர்.