ஈரோடு, செப். 13: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பெரியாண்டிபாளையம், ஈங்கூர், சிப்காட் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் 15ம் தேதி (திங்கள்) மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால், ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம், பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ், பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம்,
ஈங்கூர், பாலப்பாளையம், முகாசி பிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, தோப்புபாளையம், பெருந்துறை ஆர்எஸ், பெருந்துறை ஹவுசிங் யூனிட், சிப்காட் வளாகம் தெற்கு பகுதி, கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெருந்துறை மின் வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன் தெரிவித்தார்.