ஈரோடு, நவ.12: ஈரோட்டில் கான்கிரீட் போட பயன்படும் இரும்பு ஷீட்டுகளை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி கொடுமுடி சாலையை சேர்ந்தவர் லோகநாதன் (37). கட்டிட கட்டுமான பணிக்கு தேவையான உபகரணங்களை கான்ட்ராக்ட் எடுத்து தொழில் செய்து வருகிறார். லோகநாதன் ஈரோடு வீரப்பன்சத்திரம் தென்றல் நகரில் கான்கிரீட் போட தேவையான இரும்பு ஷீட்களை வைத்திருந்தார்.
இதில், மூன்று இரும்பு ஷீட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து ஈரோடு வடக்கு போலீசில், லோகநாதன் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், திருட்டில் ஈடுபட்ட ஈரோடு வீரப்பன்சத்திரம் ராஜூ மகன் சந்தோஷ்குமார் (24), பெரியசேமூரை சேர்ந்த செந்தில்குமார் மகன் சுதாகர் (25) ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். கைதான இருவரும் பழங்குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்தனர்.
