ஈரோடு, செப். 12: இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் திமுக.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, ஈரோடு பெரியார் நகரில் உள்ள அமைச்சர் முகாம் அலுவலகத்தில், இமானுவேல் சேகரன் படத்திற்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ், எம்எல்ஏ சந்திரகுமார், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், திமுக.வினர், தோழமை கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.