ஈரோடு, செப். 12: ஈரோடு வெண்டிபாளையத்தில் இருந்து கதவணை மின் நிலையம் செல்லும் வழியில் காலிங்கராயன் வாய்க்கால் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 10 மாதங்கள் வரை எப்போதும் தண்ணீர் ஓடும் இந்த வாய்க்காலை கடந்து கதவணை மின் நிலையத்திற்கு செல்வதற்கு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் இரும்பு குழாய்கள் மூலமாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2 இடத்தில் உடைந்து திறந்தவாறு உள்ளது.
இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் ஏராளமானன் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் வாய்க்காலுக்கு குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் வருபவர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடைந்த தடுப்புகளை மீண்டும் பொருத்தி, விபத்து அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.