மொடக்குறிச்சி, செப். 12: மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட ஆலுப்பாளையம், செந்தூர் நகர் முதல் மொடக்குறிச்சி கனபதிபாளையம் ரோடு வரை மாநில நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு எம்பி., கே.இ.பிரகாஷ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, மொடக்குறிச்சி திமுக பேரூர் செயலாளர் சரவணன், துணைச் செயலாளர் தன.வெங்கடேஷ், பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் சரவணன், துணைத்தலைவர் கார்த்திகேயன், செயல் அலுவலர் ரமேஷ்குமார், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கதிர்வேல், அவை தலைவர் பழனிசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மதன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணுசாமி, ஞானசுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் மில் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.