ஈரோடு, அக். 11: ஈரோடு எஸ்பி அலுவலக வளாகத்தில் ஈரோடு மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டது. தற்போது, எஸ்பி அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டிடங்கள், மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதையடுத்து பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷனை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து எஸ்பி அலுவலகத்தின் பின்புறம் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள அறை, மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒதுக்கப்பட்டது. நேற்று முதல் ஈரோடு மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்பி அலுவலகம் பின்புறம் பகுதியில் செயல்பட துவங்கியது.
+
Advertisement