ஈரோடு, செப். 11: ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஈங்கூர் சாலை அண்ணா நகரை சேர்ந்தவர் சண்முகம் (53). இவரது மகள் மகா விஜயராகவி (22). இவர், பிஎஸ்சி பயோ டெக் படித்து விட்டு, வீட்டில் இருந்து தையல் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். கடந்த 8ம் தேதி காலை வழக்கம்போல் தையல் பயிற்சி வகுப்புக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சென்னிமலை போலீசில் சண்முகம் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மகா விஜயராகவியை தேடி வருகின்றனர்.
+
Advertisement