ஈரோடு,அக்.10: திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி பச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் மகள் ரம்யா (21). இவர், திருப்பூர் தேவம்பாளையத்தில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வாரமாக ரம்யா ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் வேம்பதி சிந்தகவுண்டம்பாளையத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்தார்.கடந்த 7ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம்,உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசில் ரம்யாவின் அம்மா பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ரம்யாவை தேடி வருகின்றனர்.
+
Advertisement