ஈரோடு, செப்.10: சிஐடியு சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியுவின் மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அத்தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 மாதமாக நிலுவையில் உள்ள ஓய்வுகால பணப் பலன்களை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு மற்றும் அகவிலைப்படி உயர்வு 7வது ஊதியக்குழு அடிப்படையில் ஓய்வூதியம் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.
2003 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் மாரப்பன், மாவட்ட துணைத்தலைவர் முருகையா, மாவட்ட பொருளாளர் சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.