கொடுமுடி, அக்.9: கரூரில் தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் 27ம் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதில் கொடுமுடி ஆவுடையார்பாறை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(34) மற்றும் வெற்றிக்கோனார் பாளையம் பகுதியைச் சேர்ந்த ரேவதி(50) ஆகியோர் உயிரிழந்தனர்.இத்துயரச் சம்பத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பாக இழப்பீட்டு தொகையாக ரூ.10 லட்சம் வழங்கியதைத் தொடர்ந்து, கரூரில் உயிரிழந்த 41 பேரில் 8 குடும்பத்தினருக்கு கடந்த 6ம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்பி நிவாரண உதவி வழங்கினார். அதைத்தொடர்ந்து நேற்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கொடுமுடியை சேர்ந்த குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினர்.