ஈரோடு, அக்.9: ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் வருகிற 14ம் தேதி நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்காகவும் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 14ம் தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் குறைதீர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களும் தங்களது கோரிக்கை மனுக்களை 2 பிரதிகளில் நேரில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.