கோபி,அக்.9: கோபி காவல் நிலையத்தில் 3 தனிப்பிரிவு காவலர்கள் காவல் நிலைய பணிக்கு மாற்றப்பட்டனர்.
கோபி காவல் நிலைய தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த தங்கராஜ், திங்களூர் காவல் நிலைய பணிக்கு மாற்றப்பட்ட நிலையில் கோபி காவல் நிலைய தனிப்பிரிவு காவலராக சேதுபதி நியமிக்கப்பட்டு உள்ளார்.
அதே போன்று கடத்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் வேல்முருகன் நம்பியூர் காவல் நிலைய பணிக்கு மாற்றப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக பாலசுப்ரமணியம் கடத்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலராகவும், சிறுவலூர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த கந்தவேல் முருகன் கவுந்தப்பாடி காவல் நிலைய பணிக்கு மாற்றப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக விஜயகுமார் தனிப்பிரிவு காவலராக மாற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவிட்டு உள்ளார்.