பவானி, நவ. 7: அம்மாபேட்டை காவிரி ஆற்றங்கரையில் உள்ள மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோயிலில் 108 மூலிகை தீர்த்த அபிஷேக வழிபாடு நேற்று நடைபெற்றது. சிவனடியார் வெங்கடேசன் குழுவினர், இந்திய அளவில், 107 சிவன் கோயில்களுக்கு சென்று, 108 மூலிகைகள் கலந்த தீர்த்த அபிஷேக வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, 108-ஆவது கோயிலாக அம்மாபேட்டை காவிரி கரையோரத்தில் உள்ள, மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோயிலில் சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு 108 மூலிகை தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்தனர். முன்னதாக, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடங்கள் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. கோயில் அறங்காவலர் குழு தலைவர் நாகராஜன், அலுவலர்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
