சத்தியமங்கலம், அக்.7: சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை சத்தியமங்கலம் நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் காலை உணவு திட்டத்திற்காக உணவு தயார் செய்யப்படும் கூடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தயாரிக்கப்படும் உணவில் தரம் மற்றும் சுவை குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகள் மற்றும் அதில் பயன்பெறும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பட்டியலுக்கு ஏற்றவாறு அனைத்து பள்ளிகளுக்கும் சரியான நேரத்தில் உணவு கொண்டு செல்லப்படுகிறதா? என கேட்டு அறிந்தார். இந்த ஆய்வின்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியசாமி, காலை உணவு திட்ட ஒப்பந்ததாரர் ஆரோக்யராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.