ஈரோடு, ஆக. 7: பெருந்துறையில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பெருந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளருமான தோப்பு வெங்கடாச்சலம் முன்னிலை வகித்து, சிறப்புரையாற்றினார். இதில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை செய்தியை வீடு வீடாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், பூத்திற்கு 40 சதவீத உறுப்பினர்களை சேர்த்த பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பூத் ஒருங்கிணைப்பாளர்கள், திமுக பாக முகவர்கள், வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், திமுகவின் பெருந்துறை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கோவை மாலதி, பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் பெரியசாமி, பால் சின்னுசாமி, கனகராஜ், பேரூர் செயலாளர்கள் தங்கமுத்து உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.