மொடக்குறிச்சி, நவ.6: திமுக இளைஞரணி சார்பில், முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிடும் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் வெளியீடு. ‘இருவண்ண கொடிக்கு வயது 75 எனும் இருநாள் கருத்தரங்கம், அரசியல் புத்தகங்கள் மட்டுமே இடம்பெரும் ‘ முற்போக்கு புத்தகக் காட்சி’ ஆகிய முப்பெரும் நிகழ்வுகளுக்கான அழைப்பிதழை சென்னையில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் திமுக இளைஞர் அணி சார்பாக இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ், ஜோயல், இன்பா ரகு, இளையராஜா (தாட்கோ தலைவர்), அப்துல் மாலிக், பிரபு, சீனிவாசன், ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.
+
Advertisement
