ஈரோடு, நவ. 6: ஈரோடு மாநகராட்சி பகுதியில், உரிய அனுமதியின்றியும், சாலைகளை ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றியும், சாலைகளை ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பிளக்ஸ் பேனர்களை அகற்ற, ஆணையர் அர்பித் ஜெயின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, மாநகரத்தின் முக்கிய சாலைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், நேதாஜி வீதி, சத்தி ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்துக்கு இடையூறாக, சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த, 100க்கும் மேற்பட்ட பிளக்ஸ் போர்டு, இரும்பு, தகர போர்டு, மரங்களில் ஆணி அடித்து வைத்திருந்த பிளாஸ்டிக் அட்டைகளை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
