ஈரோடு, நவ. 6: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குய்யனூர் டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், சத்தியமங்கலம் போலீசார் நேற்று முன்தினம் அங்கு விரைந்து சென்று, டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த புது குய்யனூர் பகுதியை சேர்ந்த திருமலைச்சாமி (45) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், அம்மாபேட்டை செம்பட்டபாளையம் சொசைட்டி பகுதியில் மது விற்றதாக அதே பகுதியை சேர்ந்த அழகு என்ற குழந்தைசாமி (58) என்பவரை கைது செய்து, 26 மதுபாட்டில்களை அம்மாபேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
+
Advertisement
