ஈரோடு, நவ. 5: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஈரோடு சாலையில் கவுந்தப்பாடி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த கவுந்தப்பாடி குருமூர்த்தி காலனியை சேர்ந்த சதீஷ் என்ற கண்ணன் (38) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 10 கேரளா மாநில லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்யப்பட்டன.
+
Advertisement
