ஈரோடு, நவ. 5: ஈரோடு கதிரம்பட்டியை சேர்ந்தவர் நடராஜ் (65), கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் பெருந்துறையில் இருந்து ஈரோடு செல்லும் அரசு டவுன் பஸ் படிக்கட்டில் நின்று பயணித்துள்ளார். வண்ணங்காட்டு வலசு பகுதி அருகே வந்தபோது திடீரென நடராஜ் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த நடராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
