ஈரோடு, நவ. 1: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு கிராமம் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர், 9 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு சென்றார். மறுநாளான நேற்று காலை வந்துபார்த்தபோது, ஒரு ஆடு இறந்து கிடந்தது.
மற்ற ஆடுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக மிரண்டுபோய் நின்றுகொண்டு இருந்தது. தெருநாய்கள் கடித்து அந்த ஆடு இறந்தது தெரியவந்தது. தெரு நாய்களை கட்டுப்படுத்த கிராம ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
