ஈரோடு: ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கருங்கல்பாளையம், காமராஜ் நகர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள மளிகை கடை ஒன்றின் அருகில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய பெண்ணை பிடித்து விசாரித்ததில், அவர் ஈரோடு, சூரியம்பாளையம், நடுத்தெரு பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (55) என்பதும், அரசு மது பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 26 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
+
Advertisement