ஈரோடு, ஆக 2: ஈரோடு நகரில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்தது. வங்கக்கடலில் ஏற்பட்ட கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வாரங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம்...
ஈரோடு, ஆக 2: ஈரோடு நகரில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்தது. வங்கக்கடலில் ஏற்பட்ட கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வாரங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 4.15 மணியளவில் ஈரோடு நகரில் திடீரென வானம் இருண்டு, லேசான இடியுடன் மழை பெய்யத் தொடங்கியது.
மிதமான இந்த மழை காற்றின் தாக்கம் எதுவும் இன்றி சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. அதனைத் தொடர்ந்து மிக லேசான சாரல் மழையாக தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழையால் பொதுமக்களின் மாலை நேர இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளானது. மின்விநியோகமும் தடைபட்டது. சாலையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த திடீர் மழை மழையால், நகரில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.