ஈரோடு, ஆக.2: ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். அந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும். அதன்படி, நேற்று ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமை என்பதால் ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று, நீண்ட வரிசையில் காத்தருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். இதேபோல, சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் என மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், சுற்றுப்புற பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.