ஈரோடு, ஆக. 2: வெள்ளோட்டில் சுதந்திர போராட்ட வீரர் குணாளன் 220வது நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை (3ம் தேதி) நடைபெற உள்ளது. இதுகுறித்து நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்.விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சுதந்திர போராட்ட வீரரான குணாளன், தீரன் சின்னமலையோடு இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார். கடந்த 1805ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி சங்ககிரி மலையில் குணாளன் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.
கடந்த 4 ஆண்டுகளாக குணாளனுக்கு மணிமண்டபம் அமைத்து, அரசு விழாவாக அறிவிக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம். குணாளன் 220வது நினைவேந்தல் நிகழ்ச்சி ஈரோடு அடுத்த வெள்ளோட்டில் உள்ள சதா மகாலில் நாளை (3ம் தேதி) நடைபெற உள்ளது. விழாவுக்கு வருகை தரும் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி பிரமுகர்கள், எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள், சமுதாய அமைப்பின் தலைவர்களை வரவேற்கிறோம். இவ்வாறு அதில்கூறப்டடது.