ஈரோடு, ஆக. 1: ஈரோடு மாநகராட்சியில் கொசு உற்பத்தியை தடுக்க மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிதமான மழை பெய்தது. இதனால் கொசு ஒழிப்பு பணியாளர்கள், வீடு வீடாக சென்று கொசு மருந்து அடித்தும், மருந்துகளை தண்ணீர் தேங்கும் பகுதிகளில் ஊற்றியும் வருகின்றனர்.
தேவையில்லாத பொருட்களை அகற்றவும், நீரில் கொணு புழுக்கள் உள்ளனவா? என்பதை கண்டறியவும், மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் அறிவுத்தியுள்ளார். தொடர்ந்து, மாநகராட்சி பகுதிகளிலும், அரசு அலுவலக வளாகங்கள், பள்ளி வளாகங்களிலும், கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. வீடு, கடைகள், நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பணியாளர்கள், கொசு உருவாவதற்கான புழுக்கள் இருந்தால் வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.