சத்தியமங்கலம், ஆக.3: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் நடமாடும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தாளவாடி மலைப் பகுதி சிக்கஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை நேற்று அதிகாலை சிக்கஹள்ளி கிராமத்திற்குள் நுழைந்தது. இது குறித்த தகவல்...
சத்தியமங்கலம், ஆக.3: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் நடமாடும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தாளவாடி மலைப் பகுதி சிக்கஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை நேற்று அதிகாலை சிக்கஹள்ளி கிராமத்திற்குள் நுழைந்தது.
இது குறித்த தகவல் அறிந்த தாளவாடி வனத்துறையினர் யானையை விரட்ட முயன்றனர்.
அப்போது காட்டு யானை சிக்கஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது.இதைத் தொடர்ந்து வனத்துறையினர் ஜீப் வாகனத்தை பயன்படுத்தி காட்டு யானையை பள்ளி வளாகத்தில் இருந்து வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.சமீப காலமாக காட்டு யானைகள் ஊருக்குள் நுழையும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதால் தாளவாடி மலையில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.