Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திம்பம் மலைப்பாதையில் பனிமூட்டத்தால் வாகனஓட்டிகள் அவதி

சத்தியமங்கலம்,நவ.5: திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பகுதி அமைந்துள்ளது. தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைப்பாதை வழியாக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

கடல் மட்டத்திலிருந்து 1146 மீட்டர் உயரத்தில் உள்ள திம்பம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.  நேற்று காலை திம்பம் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததோடு கடுமையான பனி மூட்டம் ஏற்பட்டது. பனிமூட்டம் காரணமாக மலைப் பாதையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களில் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை மித வேகத்தில் இயக்கினர். மலைப்பாதை வழியாக பயணித்த சுற்றுலாப் பயணிகள் திம்பம் மலை உச்சியில் நின்று பனி மூட்டத்துடன் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.பனிமூட்டம் காரணமாக மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.