ஈரோடு, அக். 29: தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால், குளிர் அதிகரித்துள்ளது.
அதனை கணக்கில் கொண்டு ஈரோட்டில் குளிர்கால ஆடைகளான ஸ்வெட்டர், கம்பளி மற்றும் குளிரைத் தாங்கும் பெட்ஷீட் ரகங்கள் விற்பனைக்கு வரத்தொடங்கியுள்ளன. அதேபோல, அடுத்தமாதம் அய்யப்ப சீசன் தொடங்கவுள்ள நிலையில், காவி, கருப்பு ரக வேட்டிகள், துண்டுகள் மற்றும் பக்தர்கள் மாலை போடுவதற்காக ருத்ராட்சம் மற்றும் துளசி மாலைகள் போன்றவையும் விற்பனைக்கு வந்துள்ளன.
